வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (19:09 IST)

தமிழக ஆளுநராக கர்நாடக முன்னாள் முதல்வர் நியமனம்?

தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநராக முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



 

 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் கர்நாடக முதல்வராகவும், மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். சித்தராமையா கர்நாடகாவின் முதல்வரான பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணிக்கப்பட்டார். 
 
இதையடுத்து இவர் நாளை பாஜக-வில் இணைகிறார். இவர் பாஜக-வில் இணைந்த  பிறகு எப்போதும் வேண்டுமானாலும் இவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் இரு மாநிலங்களை கவணித்து வருவதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது.
 
ஏற்கனவே தமிழக அரசியல் சூழல் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.