புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2016 (20:27 IST)

ஜெயலலிதாவை சந்திக்க வந்த பிரபல தொழிலதிபர் மகன்

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 

 
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார்.  பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார்.
 
பின்னர் அது குறித்து பிஸ்னஸ்லைன் பத்திரைக்கைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தேன். அவர் விரைவில் குணமடைய எங்களது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
 
மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் சந்தித்தேன்.
 
அவர் விரைவில் பூரண குணமடைய நாங்கள் கடவுளை வேண்டிக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.