1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (15:48 IST)

10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி.. தூக்கில் தொங்கி மாணவர் தற்கொலை..!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வந்த நிலையில் அதில் 91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐயப்பன் என்பவரது மகன் ராகவன் இன்று காலை தேர்வு முடிவை பார்த்ததும் தான் தோல்வி அடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
 
இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்கால் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் 
 
தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran