திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (13:00 IST)

கருணாநிதியை முகத்திற்கு நேராக ஒருமையில் பேசிய தொண்டர்! – கனிமொழி ட்வீட்!

முன்னாள் திமுக தலைவர் பிறந்தநாளான இன்று அவரது மகளும், எம்.பியுமான கனிமொழி தொண்டர் ஒருவர் ஒருமையில் பேசியது குறித்து பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஊரடங்கை பின்பற்றி கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுமாறு மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழி அவர்குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் கலைஞரை பார்க்க வந்த வயதான தொண்டர் ஒருவர் கலைஞரை “எப்படி இருக்க? என்னைய நியாபகம் இருக்கா? முதலமைச்சர் ஆயிட்ட! உனக்கெல்லாம் என் நினைவு இருக்குமா? என்று கேள்வி கேட்டுள்ளார். aவர் கலைஞரை ஒருமையில் பேசியதை கண்டு சுற்றியிருந்த அனைவரும் திகைத்து போயுள்ளனர். ஆனால் கலைஞர் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் சாவகாசமாக அந்த முதியவரது பெயரை சரியாக சொல்லி அழைத்துள்ளார். மேலும் பொதுக்கூட்டத்திற்கு பேச வந்தபோது அவரை தேடியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கூறியுள்ள எம்.பி கனிமொழி “அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு.” என்று கூறியுள்ளார்.