Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினரை மீசையின்றி பார்க்க முடியாது - கனிமொழி கிண்டல்

Updated: திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:12 IST)
காவிரி விவகாரத்தில் அதிமுகவினரை ஒரு பக்க மீசையின்றி பார்க்க முடியாது என திமுக மாநிலங்கலவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் சாலை மறியல் போராடங்களும், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததே திமுக தான். ஆனால் இப்பொழுது ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
 
திமுகவினர் இதுவரை காவிரி விவகாரத்தில் எதையாவது பிரயோஜனமாக செய்திருப்பதை நிரூபித்தால் அதிமுகவினர் ஒரு பக்க மீசையை எடுக்கத் தயார் என திமுகவினருக்கு அமைச்சர் சவால் விடுத்தார். மேலும் திமுகவினரின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என கூறினார்.
ஆந்திர மாநில முதலமைச்சரை சந்தித்த பின் பேசிய திமுக மாநிலங்கலவை உறுப்பினர் கனிமொழி, காவிரி விவகாரத்தில் சவால்விட்ட அதிமுகவினரை மீசையில்லாமல் பார்க்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..

பிக்பாஸ் தோல்வி!.. விஜய் சேதுபதி மார்கெட் போன நடிகர்!.. பிரபலம் பேட்டி!...

கொலையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு!.. கனிமொழி ஆவேசம்..

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

அடுத்த கட்டுரையில்
Show comments