வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (12:47 IST)

புக்கு படிங்க.. படம் பாருங்க.. நிம்மதியா இருங்க! – கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ

கொரோனா பரவலை தடுக்க மக்களை வீட்டிற்குள் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய சொல்லி அறிவுறுத்தப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அன்றாட பணி செய்யும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாத நிதி வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட வேண்டுமே, கடன் தொகை செலுத்த வேண்டுமே என பல பிரச்சினைகளை நினைத்து கவலைக்கொள்ளாமல் தற்போது குடும்பத்துடன் இருக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். படிக்காமல் விட்ட புத்தகங்களை படியுங்கள், பார்க்காமல் விட்ட படங்களை பாருங்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். பூரண நலனுடன் இருங்கள்” என பேசியுள்ளார்.

மேலும் பல பிரபலங்களும் மக்களுக்கு கொரோனாவை கண்டு அஞ்சாமல் பாதுகாப்புடன் இருக்குமாறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.