ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (14:52 IST)

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக அகற்ற வேண்டும்! – கமல்ஹாசன் கோரிக்கை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அவ்விடத்திலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டுமென மநீம தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த போராட்டத்திற்கு பிறகு இந்த ஆலை மூடப்பட்டது. அதன்பின்னர் சமீபத்தில்தான் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலை திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் தேவை குறைந்து விட்டதால் ஆலையை மீண்டும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக திமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை முற்றுலுமாக அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார் கமல்ஹாசன்.

இதுகுறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.