Daily Horoscope
✕

மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (10:11 IST)
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்த நிலைஇல் கட்சியின் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
தலைநகர் சென்னையில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர்  மெளரியா தலைமையிலும், கோயம்புத்தூரில் துணைத்தலைவர் தங்கவேல் தலைமையிலும், மதுரையில் இளைஞரணி மாநிலச் செயலாளர்  கவிஞர் சினேகன் தலைமையிலும்,சேலத்தில் மாநிலச் செயலாளர் சிவா இளங்கோ தலைமையிலும், நாகப்பட்டினத்தில் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் வைத்தீஸ்வரன் தலைமையிலும், திருநெல்வேலியில் நெல்லை மண்டலச் செயலாளர் மருத்துவர் D. பிரேம்நாத் தலைமையிலும், திட்டக்குடியில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஸ்ரீபதி தலைமையிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மய்ய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். 
 
வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத   மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். 
 
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நிர்மல்குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் விஜய்க்கு ஆப்படிப்பாங்க!.. பழனிச்சாமி பேட்டி...

AI கத்துக்கிட்டா வாரத்துல 3 நாள்தான் வேலை!.. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கருத்து...

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

சென்னையில் 2 லூலு சில்லரை விற்பனை நிலையங்கள் திறப்பு.. முதல் நாளே அலைமோதிய கூட்டம்...

இன்று பகலில் பெய்த மழை வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments