1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:31 IST)

ரவிக்கு பதில் புவி என பெயர் மாற்றுவாரா கவர்னர்? கமல்ஹாசன் கேள்வி

Kamal
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்ததற்கு ஆளுநர் தனது பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என்று மாற்றிக் கொள்வாரா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது என்றும் மத அரசியலை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்குபெற்ற என்றும் தெரிவித்த கமல்ஹாசன் தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு இப்போராட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது என்றும் இதை மாற்ற சொல்வதற்கு அவர் யார் என்றும் அவர் தனது பெயரை ரவி என்பதற்கு பதிலாக பூமி என்று மாற்றிச் சொன்னால் மாற்றிக் கொள்வாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார் 
 
மதத்தின் பெயரில் அரசியல் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அரசியல் என்பது மக்களுக்கானது என்றும் மதத்துக்கு ஆனது அல்ல என்றும் அவர் தெரிவித்தார் மிட்டப்பள்ளி
 
Edited by Mahendran