ரஜினியின் தீவிர ரசிகரின் மரணத்திற்கு கமல் தெரிவித்த அனுதாபம்
தீவிர தமிழ் பற்றாளரும் எழுத்தாருமான தகடூர் கோபி அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் மொழிக்கு ஒரு பேரிழப்பு என தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தகடூர் கோபி ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்றும் Rajinifans.com என்ற இணையதளத்தின் அட்மினாகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகடூர் கோபி ஒரு தீவிர ரஜினி ரசிகராக இருந்தாலும் அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'குமாரசாமிப்பேட்டைக் குமாரன் தகடூர் கோபியை நவீனக் கணினி யுக உலகத் தமிழ் சமுதாயம் வணங்குகிறது. அவர் தமிழர்க்கு அளித்த கொடையை மறவோம். தமிழ் தாய்க்கு இது போல் குழந்தைகள் இனியும் பிறக்கும் ,பிறக்க வேண்டுமென்பதே நம் அவா. குடும்பத்தார்க்கு ஆழ்நத அனுதாபங்கள்.
என்று குறிப்பிட்டுள்ளார்
பலருக்கும் தெரியாத ஒரு தமிழ்ப்பற்றாளரை உலகிற்கே தெரிய வைத்த கமல்ஹாசனின் பெருந்தன்மையை ரஜினி ரசிகர்கள் உள்பட டுவிட்டர் பயனாளிகள் போற்றி வருகின்றனர்.