’பரபரப்பு’ கஞ்சா கருப்பு மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண்!
நடிகர் கஞ்சா கருப்பு சில தினங்களுக்கு முன்பு ஒரு வார இதழில், தனது மேனேஜர் வி.கே. சுந்தர் தன்னுடைய நான்கு கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாகவும், இந்த மோசடியில் அவரது மனைவி மற்றும் கள்ளன் பட இயக்குனர் சந்திராவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து சந்திரா கூறியதாவது, “வார இதழில் வெளிவந்த செய்தி தெரிந்து, நானும் என் கணவர் வீ.கே.சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம்.
அது எங்களுக்கு மிகுந்த மன வேதனையையும் தாங்க இயலாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நான் தற்போது இயக்கிவரும் ‘கள்ளன்’ திரைப்படம் எட்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக வி.மதியழகனால் தயாரிக்கப்படுகிறது.
அவர்களே முழு தயாரிப்புச் செலவையும் மேற்கொண்டு வருகிறார்கள். நான் என் முயற்சியில் இயக்கியுள்ள திரைப்படத்தை ஏதோ அவரிடமிருந்து திருடிய பணத்தில் படமெடுத்து வருவதாக பொய்யான செய்தியைக் கூறியுள்ளார்.” என்றார்.
இது தொடர்பாக, நடிகர் கஞ்சா கருப்பு மீது அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.