வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (12:43 IST)

தி.மு.க கூட்டணிக்கு 40ல் 33 தான்.. ஜூனியர் விகடன் சர்வே..!

தமிழக மற்றும் புதுவை என 40க்கு 40  திமுக கூட்டணி தான் வெல்லும் என்று கூறப்பட்டாலும் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்றும் அதிகபட்சமாக திமுகவுக்கு 33 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஜூனியர் விகடன் எடுத்த கருத்து கணக்கில் இருந்து தெரிய வந்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் ஜூனியர் விகடன் டீம் கருத்துக்கணிப்பு எடுத்ததில் அது குறித்த முடிவுகளில் திமுக கூட்டணிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
அதிமுகவுக்கு ஒரு தொகுதி வெற்றி உறுதி என்றும் மீதமுள்ள ஆறு தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த ஆறு தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற திமுகவும் மறைமுகமாக உதவி செய்கிறது என்றும் கூறப்படுகிறது.
 
இதுபோக மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் பாஜக அல்லது அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் தாமதமாக சின்னம் கிடைத்தாலும் அந்த சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு போய் நாம் தமிழர் கட்சி சேர்த்து இருக்கிறது என்றும் ஒரு தொகுதியில் மட்டும் மூன்றாவது இடம் கிடைக்க அந்த கட்சிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் கடைசி நேரத்தில் பணம் விளையாட்டு நடந்தால் ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு மாறவும் வாய்ப்பு உண்டு என்று ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran