செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (16:32 IST)

ஜூலியை நினைத்தால் வெறுப்பாக உள்ளது - சகோதரர் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஜூலியின் நடவடிக்கை மோசமாக இருக்கிறது என அவரின் சகோதரர் ஜோஷ்வா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதலே ஜூலியின் நடவடிக்கைகள், அந்த வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், பார்க்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. நடிகர் ஸ்ரீ-யிடம் ‘நீ எனக்காக இங்கே இரு’, ‘என்னைப் பற்றி நினைத்துப் பார்’, என்னைக் கட்டிப்பிடிக்கக் கூட இங்கே ஆள் இல்லை என்றெல்லாம் பேசி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார். 
 
அதன் பின், அவரிடம் ஆர்த்தி சண்டை போடும் போதெல்லாம் அழுது வடிந்து ஒப்பாரி வைத்தார். மேலும், இயல்பாக இல்லாமல் எதிலும் கொஞ்சம் அதிகமாக நடிப்பது போலவே அவர் செயல்பட்டு வருகிறார்.
 
சென்ற வாரம் அவர் வெளியேகிறார் என கமல்ஹாசன் கூறிய போது,  அனைவரையும் பயங்கரமாக கட்டிப்பிடித்து சோகத்தை வெளிப்படுத்தினார். தற்போது அவர் நடிகர் சக்தியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் ஜூலியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவரின் சகோதரர் ஜோஷ்வா “ என் அக்கா ஜூலிக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்த்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவரை ஏன் அங்கு அனுப்பி வைத்தோம் என இப்போது வேதனையாக இருக்கிறது. 
 
ஜல்லிக்கட்டில்  கிடைத்த பெயரை அவர் கெடுத்துக்கொண்டார். அவரை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. அவரின் நடவடிக்கைகள் பற்றி கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் போடுகின்றனர்.  அவர் எப்போது வெளியே வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரால் எனது மொத்த குடும்பமே வேதனையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே பயமாக உள்ளது.