செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (20:01 IST)

ராதாகிருஷ்ணன் திறமையான அதிகாரி: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பாராட்டு

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை அதிரடியாக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏற்கனவே சுகாதார செயலாளராக இருந்தவரும் தற்போது கொரோனா சிறப்பு அதிகாரியாக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் அவர்கள் சுகாதார செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மன பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: மூன்று நாட்களில் கொரொனா தொற்று ஒழிந்துவிடும் என்று முதல்வர் சொன்னதே இந்த அரசு எவ்வளவு அலட்சியத்தோடு கொரொனாவை அணுகியது என்பதற்கு சாட்சி. அடுத்து பரிசோதனை கருவி ஊழல். ராதாகிருஷ்ணன் ஒரு நல்ல,திறமையான அதிகாரி. அவரிடம் முழுபொறுப்பையும் ஒப்படைத்து,பரிசோதனையை அதிகரிக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.