ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (18:06 IST)

விஜயதரணி செய்தது இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.. ஜோதிமணி எம்பி

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இன்று திடீரென பாஜகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது கட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் பிரமுகர்கள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதி மணியும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்தரணி செய்தது தேசத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்று கூறிய அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

தலைவர் ராகுல் காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்தி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் , விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்தி தான்  கடக்க வேண்டியிருக்கிறது.  பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனால்  அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்கு செல்வதையும் எவ்விதத்திலும்  ஏற்றுக்கொள்ள முடியாது.

Edited by Mahendran