வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:07 IST)

தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதவி… திமுகவில் ஆட்கள் பஞ்சம் வந்துவிட்டதா ? – அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி !

அமமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்தபோது அதிலிருந்து விலகி தினகரன் துவங்கிய அமமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அவருக்கு வலது கைபோல செயல்பட்டார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

திருச்சி சிவா, ஆ ராசா ஆகியோர் அப்பதவியில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தங்க தமிழ்ச்செல்வனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இதுபற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘ திமுகவுக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, இந்த பதவி தங்க தமிழ்ச்செல்வனுக்குக் கொடுக்கப்பட்டது, திமுகவில் ஆட்கள் பஞ்சம் இருப்பதையேக் காட்டுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல திமுக ஆக்கிரமிப்பு அதிமுக இருக்கிறது. ’ எனத் தெரிவித்துள்ளார்.