வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (11:16 IST)

நேற்று வந்தால் வரட்டும்.. இன்று பேச்சுவார்த்தை சுமூகம் – ஜெயக்குமார் அடித்த அந்தர்பல்டி !

தேமுதிக உடனான அதிமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தேமுதிக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இரண்டுக் கட்சிகளும் தேமுதிக கேட்கும் சீட்களை கொடுக்க தயங்கி வருவதால் தொகுதிகளுக்கான பேரம் நடைபெற்று வருகிறத்யு. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதிகளவிலான தொகுதிகளை ஏற்கனவே ஒதுக்கி விட்டதால் தேமுதிக வுக்கு ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் தேசியக் கட்சிகளை விடவும் மாநிலக் கட்சிகளான பாமகவை விடவும் தமிழகமெங்கும் பரவலான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தேமுதிக இந்தக் கட்சிகளை விட குறைவானத் தொகுதிகளை பெற்றால் தங்கள் கட்சிக்கு அது பலவீனமாக அமையும் என நினைக்கிறது. அதனால் இன்னும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடந்த சில சம்பவங்களின் மூலம் அதிமுக தேமுதிக உடனானக் கூட்டணியை இழக்க முடிவு செய்தது போலத் தோன்றியது. அமைச்சட் ஜெயக்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ‘தேமுதிக வோடுக் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம். வரவில்லையென்றால் வருத்தம் இல்லை’ எனக் கூறினார். மேலும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றோரும் தேமுதிக வை விமர்சனம் செய்து வந்தனர்.

இதையடுத்து திமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அமைச்சர் ஜெயக்குமார் ‘ தேமுதிக உடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது’ எனக் கூறியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் இப்படி இருவேறுக் கருத்துகளை ஜெயக்குமார் கூறியுள்ளதால் தேமுதிக – அதிமுக கூட்டணிக் குறித்த குழப்பங்கள் மேலும் அதிகமாகியுள்ளன.