செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: விருதுநகர் , வியாழன், 25 ஏப்ரல் 2024 (22:46 IST)

இழப்பீடு வழங்காததால் அரசுக்கு சொந்தமான ஜீப் நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி !

விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இது தொடர்பாக இழப்பீடு கோரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். 
 
இது குறித்து நீதிபதி ஹேமந்தகுமார் கடந்த 2023 ஆம் ஆண்டு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
 
ஆனால் தற்போது வரை இழப்பீடு வழங்காததால் நேற்று நீதிமன்ற ஊழியர்களால் ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.