செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 21 டிசம்பர் 2016 (09:21 IST)

ஜெ. மரணம் தொடர்பாக இந்த 20 பேரிடம் விசாரணை நடத்துங்க!

ஜெ. மரணம் தொடர்பாக இந்த 20 பேரிடம் விசாரணை நடத்துங்க!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். நடிகை கௌதமி, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என பலரும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் பள்ளிக்கால தோழி கீதா என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் கீதா.
 
ஜெயலலிதாவின் பள்ளி தோழி கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
 
மேலும் பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளித்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என கூறியுள்ள கீதா சொத்துகளை கைப்பற்ற கொலை செய்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.