ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (20:18 IST)

ஜெ. நிலைமை: செய்தியாளர்களை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்!

ஜெ. நிலைமை: செய்தியாளர்களை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்!

தமிழக முதல்வரின் உண்மையான நிலமை என்ன என்பதில் பொதுமக்கள் தெளிவாக குழம்பி போய் உள்ளனர். முதல்வர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என கூறிவந்த ஊடகங்கள் இன்று மாலை அவர் மரணமடைந்தார் என செய்தி வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ விளக்கம் அளித்தது.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து விசாரிக்க பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை அப்பல்லோவுக்கு வந்தார்.
 
இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி பரவிய நேரத்தில் தான் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த மத்திய அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துவிட்டு மீண்டும் டெல்லி கிளம்பி சென்றுவிட்டார்.
 
மக்களின் அச்சத்தையும் தேவையில்லாத பதற்றத்தையும் போக்கும் விதமாக அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கலாம் என பேசப்படுகிறது.