புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (14:35 IST)

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க மறுத்த சசிகலா: ஓபிஎஸ் பகீர் தகவல்!

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க மறுத்த சசிகலா: ஓபிஎஸ் பகீர் தகவல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சைக்கு பின்னர் மரணமடைந்தார். அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல தான் கூறியதை சசிகலா மறுத்ததாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதற்கு ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தடையாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.
 
இதற்கு இன்று விளக்கம் அளித்த ஓபிஎஸ், ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களில், தம்பிதுரையை அழைத்து அப்போலோவில் போதுமான சிகிச்சை வழங்கப்படுகிறதா எனத்தெரியவில்லை. எனவே, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்ப்பது தொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் பேச சொன்னேன்.
 
பின்னர் சசிகலா குடும்பத்திடம் பேசிவிட்டு வந்து கூறிய தம்பிதுரை, அமெரிக்கா வேண்டாம், இங்கு அளிக்கும் சிகிச்சையே போதுமானது என சசிகலா கூறியதாக என்னிடம் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் கூறுவது போன்று ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்கு நான் தடையாக இருக்கவில்லை என்றார் ஓபிஎஸ்.