உதயநிதி கூலிங் கிளாஸ் போட்டு ஒடிஷாவுக்கு சுற்றுலா சென்று வந்தார்: ஜெயக்குமார்..!
சமீபத்தில் ஒடிசாவில் ரயில் விபத்து என்ற துயர நிகழ்ச்சி நடந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட சென்று வந்தார் என்பதும் இது குறித்து அவர் முதலமைச்சர் இடம் விளக்கியதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ஒரிசா பயணத்தை சுற்றுலா சென்று வந்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும் போது யாராவது கூலிங் கிளாஸ் போட்டு வருவார்களா? சூட்டிங் சென்ற மாதிரி அவர் ஒடிசாவுக்கு சென்று வந்துள்ளார் என்று கூறினார். மேலும் ஒரிசா சென்றவர்கள் சம்பவம் இடத்திற்கு செல்லவே இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்
பிரதமர் வருகையால் உதயநிதியை அனுமதிக்கவில்லை என்று கூறிய போது அதையெல்லாம் ஏற்க முடியாது, ஒரு முதலமைச்சரின் மகன் ஒரு மாநிலத்தின் அமைச்சரை தடுக்க யாராலும் முடியாது, இந்த பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.
மேலும் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. அவர்களில் யாராவது தமிழர்கள் இருந்தார்களா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தமிழக அரசு ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
Edited by Mahendran