திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:58 IST)

அரசின் ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது? ஜெயகுமார் கேள்வி

Jayakumar
அரசின் ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய அறிக்கை ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய இரகசிய ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மாதம் இருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகைக்கு தகவலை கசிய வட்டவர்கள் யார் என விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
 
 இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது