Daily Horoscope
✕

இனிமேலும் பொறுமையாக இருக்க மாட்டேன்: சசிகலாவுக்கு ஜெ.தீபா எச்சரிக்கை

Written By Siva
Updated: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:09 IST)
இனிமேலும் பொறுமையாக இருக்க மாட்டேன் என சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு சசிகலாவும் அவருடைய உறவினர்களும் தான் காரணம் என்றும் தன்னுடைய ஆதாயத்திற்காக என்னுடைய அத்தையை சசிகலா பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஜெ தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
மேலும் என் குடும்பத்தைப் பற்றியும் என் அம்மாவைப் பற்றியும் சசிகலா பேசிக்கொண்டிருந்தால் இனியும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
என் அம்மாவின் சாவுக்கு கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர் தான் சசிகலா என்றும் தன் மீது எந்த தவறும் இல்லை என சசிகலா நீதிமன்றத்தில் மக்களிடத்திலும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். தீபாவின் இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

AI அம்சத்துடன் இந்திய நிறுவனமான லாவா விராட் கர்வ்: ரூ. 25,000-க்குள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்!

ரோட்டில் தர்ணா செய்த பிரியங்கா காந்தி.. தரதர என இழுத்து சென்ற டெல்லி போலீஸ்..

தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்‌ஷன் இதுதான்!..

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

அடுத்த கட்டுரையில்
Show comments