செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (11:03 IST)

அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் - சபதம் எடுத்த ஜெ.தீபா

ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் சட்டப்பூர்வமாக என்னால் வகிக்க முடியும் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவி தீபா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவியுமான தீபா, கரூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்றார். அப்பொழுது பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான ஆட்சி. மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சிக்கு கீழ் இயங்கும் ஆட்சி தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி என ஆவேசமாக பேசினார். மேலும் தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்றார்.
 
பின் நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக வகிக்க முடியும் என்றார். சட்டத்தை மீறி பொறுப்பு வகித்து வரும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை விரைவில் பதவியில் இருந்து தூக்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே எனது குறிக்கோள் என சபதம் எடுத்தார் ஜெ.தீபா.