செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (16:49 IST)

ஊழியர்களுக்கு, work from home வழங்க மறுக்கும் ஐடி நிறுவனங்கள்

சென்னைக்கு மிகப்பெரிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை நேரடியாக அலுவலகத்திற்கு வரும்படி வற்புறுத்துகின்றன.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்றுமுன் வரவிருக்கும் 4 நாட்களுக்கு work from home முறையை கடைபிடிக்குமாறு ஐடி நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தாலும், சென்னையின் ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி பகுதிகளில் உள்ள பல ஐடி நிறுவனங்கள் இதுவரை அதற்கான உத்தரவை அறிவிக்கவில்லை.
 
அதே நேரத்தில், மின்சார பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பராமரிப்பு போன்ற வேலைகள் இந்த  பகுதிகளில் நடைபெற்று வருவதால், ஊழியர்களின் பயணம் இன்னும் சிரமமானதாகவே உள்ளது.
 
ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி சாலைகளில் சாதாரண நாட்களிலேயே வாகன நெரிசல் அதிகம் காணப்படும் நிலையில், இப்போது மழை காரணமாக அந்த சாலைகளில் நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே ஐடி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதில் பெரும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran