செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (18:29 IST)

சசிகலாவை சந்திக்காமல் பீலா விட்டாரா தினகரன்?

ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தனது சித்தி சசிகலாவை பெங்களூர் சிறைக்கு சென்று இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார் அவர்.
 
தினகரன் தனது பேட்டியில் சசிகலா தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு பின்னர் மௌன விரதம் இருந்து வரும் அவர், நான் கூறியதை மட்டும் கேட்டுவிட்டு சரி என தலையை ஆட்டியதாக கூறினார்.
 
ஆனால் சசிகலாவை தினகரன் சந்திக்காமலே அவரை சந்தித்ததாகவும், அவர் மௌன விரதம் இருப்பதாகவும் பீலா விடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் சசிகலா, தினகரனை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நைட்டியில் இருக்கும் வீடியோவை தினகரன் தரப்பு தனது அனுமதியில்லாமல் வெளியிட்டதில் சசிகலா தினகரன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சசிகலா தன்னை சந்திக்க வந்த தினகரனை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.