திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:34 IST)

Chennai IIT - புது வகை கொரோனா பாதிப்பா..??

இன்று சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தகவல். 

 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் நேற்று வரை சென்னை ஐஐடியில் 1,676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அதில் இன்று சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. 
 
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்வருமாறு பேட்டியளித்தார். சென்னை ஐஐடியில் ஒருநாள் எடுக்கப்படும் பரிசோதனைகளில் 20% மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1.5% ஆக குறைந்துள்ளது. 
 
அதேபோல ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ஏற்கனவே உள்ள கொரோனா வகையால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 6,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையிலேயே வெளிப்படையான பரிசோதனை நடைபெறுகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம்.