சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?
யூடியூபர் மற்றும் குக் வித் கோமாளி போட்டியாளர் இர்பான் தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்டதாகவும் இதையடுத்து அவர் மீது நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த வீடியோவை அவர் நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவர் ஒவ்வொரு ஹோட்டலாக சென்று அங்கு சுவைத்து ரசிக்கும் உணவு குறித்த வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டே இர்பான் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மனைவியுடன் துபாய் சென்று அங்கு ஸ்கேன் சென்டரில் தனது மனைவியின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருப்பது பெண் குழந்தை என்று ஒரு பார்ட்டியில் அறிவித்ததாக தெரிகிறது.
இது குறித்த வீடியோவை அவர் தனது யூடியூப் தளத்தில் பதிவு செய்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் மருத்துவ துறை பரிந்துரை செய்தது. இதனை அடுத்து சர்ச்சைக்குரிய வீடியோவை இர்பான் நீக்கியதாக கூறப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran