இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்வது குறித்து இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்ததோடு பழைய நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்கள் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. பழைய ரூபாய் நோட்டுக்ளை எல்லா இந்திய வங்கி கிலைகளிலும் நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம்.
பழைய நோட்டுகளை ரூ.4000 வரை மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும்போது அடையாள அட்டை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்றவற்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.