செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (10:45 IST)

அண்ணா பல்கலை. தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: துணைவேந்தர் தகவல்..!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று தகவல் வெளியான நிலையில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேட்டி அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அறிவிப்பு வரும் வரை பழைய கட்டணமே தொடரும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

ஜனவரி மாதத்திற்குள் அமைச்சர் தலைமையில் அனைத்து துணைவேந்தர் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே தேர்வு கட்டணம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கு பின் ஆலோசனைக்கு பிறகு தான் 50 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க கேட்டு கொண்டதால் மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran