10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி டதொடங்கி 28 ஆம் தேதி முடிவடைகிறது. 10 ஆம் வகுப்பு மாணாவர்களுக்கு மே 6ல் தொடங்கி 30 ஆம்தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9 ஆம் ததி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.