செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2016 (20:42 IST)

நான் பேச ஆரம்பித்தால்: சவால் விட்ட விஜயகாந்த்

தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தேர்தல் பரப்புரைக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில் பேசிய விஜயகாந்த் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.


 
 
நான் பேச ஆரம்பித்தால் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் தாங்கமாட்டார்கள் என எச்சரித்தார். மேலும் மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி கிரானைட் வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை விடுதலை செய்ததை விமர்சித்தார். அதில் உள்நோக்கம் உள்ளது என குற்றம்ச்சாட்டினார்.
 
மேலும் தங்கள் கூட்டணிக்கு கொள்கையே இல்லை என பரவலாக பேசப்படுவதற்கு விளக்கம் அளித்தார். 6 கட்சிகளுக்கும் கொள்கை இல்லை என்று கூறுகிறார்கள். ஒரே கொள்கைக்காக நாங்கள் 6 கட்சிகளும் இணைந்துள்ளோம் என பதிலளித்தார்.
 
ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி மதுவிலக்கை அமல்படுத்தாமல், தற்போது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என அறிவித்ததையும் விமர்சித்தார் விஜயகாந்த்.