செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (10:33 IST)

தினகரன் வெற்றி பெற்றால் அதிமுக என்ன ஆகும்?

நடந்து முடிந்துள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஊடகங்களின் கருத்துக்கணிப்பின்படி டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோ வெற்றி பெற்றால் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் தினகரன் வெற்றி பெற்றால் அதிமுகவில் ஒரு பெரிய மாறுதல் இருக்கும் என்று கூறப்படுகிறது

அதிமுகவில் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையை விரும்பியும், விரும்பாலும் ஏற்றுள்ளனர். ஆட்சி முடியும் தருவாயில் நிச்சயம் அதிமுகவில் இன்னுமொரு உடைப்பு உருவாகும். இந்த நிலையில் தினகரன் வெற்றி பெற்றால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு ஏற்படும் என்றே கூறப்படுகிறது

எம்ஜிஆரின் சின்னம் இரட்டை இலை, அதிமுகவின் பெயர், கொடி, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, ஆளுங்கட்சி என்ற பவர் ஆகிய இத்தனை இருந்தும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை என்றால் நிச்சயம் தலைமை கேள்விக்குறியாகத்தான் பார்க்கப்படும். எனவே தினகரன் வெற்றி பெற்றால் அவருடைய அணிக்கு பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது