திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (18:24 IST)

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

என்னை கொலை செய்ய வந்தவர்களை கூட மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முகவர்கள் கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக ஓட்டு சாவடி முகவர் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்தில் தேர்தல் எப்படி நடக்கும், எப்படி வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும் என்று பேசிய அமைச்சர் துரைமுருகன், யாரும் என்னை ஏமாற்ற முடியாது என்றும் கூறினார்.
 
"ஒரு முறை நான் ஏமாந்து விட்டேன், அது கோவிட் காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லையெனில், கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.  
 
"நான் யாரை வேண்டுமானாலும் மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மட்டும் மன்னிக்க மாட்டேன். என்னை கொலை செய்ய வந்தாலும் கூட மன்னித்து விடுவேன்," என்று அவர் தெரிவித்தார்.
 
"60 முதல் 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்தவன் நான். ஆகையால், இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியுடன் இருப்பவன் நான். இந்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை விட வேறு கொடுமை இருக்க முடியாது," என்றும் துரைமுருகன் கூறினார்.
 
 
Edited by Siva