ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (10:07 IST)

விஜயகாந்த் பணம் வாங்கவில்லை: மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்ததுக்கு காரணம் வேறு!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வியடைந்தது. அதன் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டை இழந்தார். கட்சியின் வாக்கு வங்கியும் 2.5 சதவீதமாக குறைந்தது.


 
 
இந்நிலையில் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து கட்சியினருடன் ஆலோசித்து வரும் விஜயகாந்த் சட்டசபை தேர்தலில் தான் பணம் வாங்கியதாக வரும் குற்றச்சாட்டுக்கு கட்சியினரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
 
தேர்தலில் பணம் வாங்கிவிட்டோம் என்று வரும் தகவல்கள் பொய்யானது. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கூறிய விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்ததற்கு காரணம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் என கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் விஜயகாந்த் கூறியதாக பேசப்படுகிறது.
 
மேலும், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தது தவறான முடிவு எனச் சொல்கிறார்கள் எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம். நாம் இழந்த செல்வாக்கை வரும் தேர்தல்களில் மீட்டெடுப்போம் என நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கூறியதாக தகவல்கள் வருகின்றன.