ஆண்குழந்தை பிறக்காததால் மனைவிக்கு எச்.ஐ.வி ஊசி போட்ட கணவர்!
திருமலையில் உள்ள குண்டூர் பகுதியில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால், மனைவிக்கு எச்.ஐ.சி ஊசி போட்ட கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருமலை குண்டூரில் உள்ள பகுதியில் உள்ள தாடேப்பள்ளியில் வசிப்பவர் சரண்(35). இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மாதவி(32) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு தற்போது 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சரணின் 2 தம்பிகளுக்கும் ஆண் குழந்தைகள் உள்ளதால் தனக்கும் ஆண் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில், தன் மனைவிக்கு ஒரு மருத்துவர் மூலம் ஊசி செலுத்தியுள்ளார். இதனால் உடற் சோர்வு அடைந்த அவர் வேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டபோது அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாக தகவல் தெரிந்தது.
இதையடுத்து, போலீஸார் சரணைக் கைது செய்து, இதுகுறித்து உண்மை கண்டறியும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Edited By Sinoj