1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (12:06 IST)

எவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை: தனபால்!

சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு  வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார்.

 
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும்  என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தினார். மேலும் வாக்கெடுப்பை மற்றொரு நாளில் நடத்துவது  நல்லதாக இருக்கும் என்று கூறினார். மக்களை சந்தித்து, ஒரு வார காலத்திற்கு பிறகு நடத்தினால் மட்டும் அது ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்த்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் தனபால்  நிராகரித்தார். தொடர்ந்து கூறுகையில் எவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை என்றும்  குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு  கோரினார். சபை கூடியதும், எதற்காக அது கூட்டப்பட்டுள்ளது என்பதை சபாநாயகர் தனபால் அறிவித்தார். பின்னர் பெரும் அமளிக்கிடைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசியுள்ளார். இந்நிலையில் பேரவை கூடி 1  மணி நேரம் ஆகியும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கவில்லை.