சென்னையில் எந்த வயதினருக்கு எவ்வளவு பாதிப்பு...?
சென்னையில் கொரோனா வைரஸால் எந்த வயதுக்கு உட்பட்டோர் எளிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொருத்த வரை சென்னையில் அதிக பாதிப்பு உள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் 303 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 80 பேர் குணமடைந்து உள்ளனர்.
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.23% பேரும், பெண்கள் 34.77% பேரும் அடக்கம். வயது வாரியாக அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 64 பேருக்கு தொற்று உள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு..
9 வயதுக்கு கீழ் 4 பேருக்கும்,
10 முதல் 19 வயதுள்ளோர் 21 பேருக்கும்,
20 முதல் 29 வயதுள்ளோர் 49 பேருக்கும்,
40 முதல் 49 வயதுள்ளோர் 56 பேருக்கும்,
50 முதல் 59 வயதுள்ளோர் 53 பேருக்கும்,
60 முதல் 69 வயதுள்ளோர் 32 பேருக்கும்,
70 முதல் 79 வயதுள்ளோர் 16 பேருக்கும்,
80 வயதுக்கு மேல் 7 பேருக்கும் நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.