1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (17:57 IST)

நாங்களும் வரோம்: ஆர்.கே. நகரில் களம் இறங்கும் இந்து மக்கள் கட்சி

ஆர்.கே. நகர் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அந்த தொகுதிக்கும் ஏப்ரல்12ம் தேதி இடைத்தேதல் நடக்க உள்ளது. இதில் அதிமுக,திமுக,தேமுதிக,தீபா, மா.கம்யூ ஆகிய கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால் அங்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்து மக்கள் கட்சியும் இணைந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், ஆர்.கே. நகர் தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.