செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:04 IST)

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்களை சேகரிக்கும் பணி தொடக்கம்!

ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் பாகங்களை எடுத்துச் செல்லும் பணி இன்று தொடங்கியது. 

 
கடந்த 8 ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.
 
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் பாகங்களை எடுத்துச் செல்லும் பணி இன்று தொடங்கியது. விமானப்படையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு உடைந்து கிடக்கும் ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரித்து வருகின்றனர்.