சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்:
சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக எழும்பூர், வேப்பேரி, பூவிருந்தவல்லி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும், கனமழை காரணமாக சென்னையில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவ்ந்துள்ளது.
மேலும் சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் அலுவலகங்களை விட்டு வீடு செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது என்பதால் இன்னும் ஒருசில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது