ஒரே ஒரு புயல் காரணமாக பெய்த கனமழையால் இந்த ஆண்டுக்கான தண்ணீர் கஷ்டம் தீர்ந்தது என்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளதாகவும் உன் தகவல் வெளியானது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 528 ஏரிகள் உள்ள நிலையில், 153 ஏரிகள் முழுமையாக நிரம்பியதாகவும், 163 ஏரிகள் 75%, 160 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளதாகவும், மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும், நேற்று காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவு 24 அடியில் 20 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் தகவல் வழியாக வெளியானது.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும், நீர்மட்டம் 22 அடியை நெருங்கும் போது பாதுகாப்பு கருவி ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 231 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளதாகவும், மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதாகவும், அதுமட்டுமின்றி குளம், குட்டைகள், கண்மா மிக வேகமாக நெருங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran