வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (07:34 IST)

காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Rain
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் தென் தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 13ஆம் தேதி வரை, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதியிலும், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது."


Edited by Siva