புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (11:08 IST)

23 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம்..!

இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதலே சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என தெரிவித்த 23 மாவட்டங்கள் பின்வருமாறு:
 
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி
 
Edited by Mahendran