கமலின்_ராஜபாட்டை: டிரெண்டிங்கின் பிண்ணனி என்ன??
சமூக வலைத்தளமான டிவிட்டரில் கமலின்_ராஜபாட்டை என்ற ஹேஷ்டேக் காலை முதல் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது எதிர்பாராத வகையில் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தார். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் ஆரம்பத்திலேயே இந்த கலவரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கலாம் என்றும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் இந்த கலவரம் பெரிதாகி உள்ளது என்றும் கூறினார்.
மத்திய அரசை இதுவரை நேரடியாக ரஜினி விமர்சனம் செய்யாத நிலையில் திடீரென அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது, சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்! என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது கமலின்_ராஜபாட்டை என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் தனது 3 வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. எனவே இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கமலின்_ராஜபாட்டை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவதாக தெரிகிறது.