வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:56 IST)

”இது ஹிந்து மதத்தின் மீது தொடுத்திருக்கின்ற யுத்தம்” ஹெச் ராஜா பேட்டி

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்யவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடி வந்ததை குறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடி வந்ததை தொடர்ந்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு செய்யலாம் என இந்து அறநிலையத்துறையும் தமிழக அரசும் கூறியது.

இதனிடையே குடமுழுக்கு தமிழில் நடத்தவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடியதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ஹிந்து மதத்தின் அடையாளமாக பொட்டு இருக்கையில் , அதனை அழித்த ஹிந்து விரோதிகளுக்கு குடமுழுக்கு விஷயத்தில் தலையிட என்ன உரிமை இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் அப்பேட்டியில், “இது ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்து மதத்தின் மீது தொடுத்திருக்கின்ற யுத்தம், இதனை முழு சக்தியோடு எதிர்கொள்ள ஹிந்து மதம் தயாராக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.