புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (22:19 IST)

அரியலூர் விரைந்தார் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமாகிய ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் நெடுவாசல் வரை வெறும் டுவிட்டரில் மட்டும் கருத்து கூறுவதோடு நின்றுவிடாமல் அந்தந்த பகுதிக்கே சென்று போராட்டம் செய்பவர்களுக்கு நேரில் ஆதரவு கொடுத்தவர் என்பது தெரிந்ததே



 
 
அந்த வகையில் இன்று நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட துன்ப செய்தி அறிந்ததும் முதல் ஆளாக டுவிட்டரில் தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்த ஜி.வி.பிரகாஷ், தற்போது அனிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த நேரடியாக அரியலூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அனிதாவின் மரணத்தை எப்படி அரசியல் ஆக்கலாம் என்று தலைவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் உண்மையான அக்கறையுடன் இறுதியஞ்சலி செலுத்த சென்ற ஜி.வி.பிரகாஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது