செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (11:25 IST)

போய் சசிகலா கால்ல விழுந்தீங்க... துக்ளக் குரூமூர்த்தி சமாதானத்திலும் சர்ச்சை!

துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து சர்ச்சை பேச்சு குறித்து குருமூர்த்தி டிவிட்டரில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
 
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் எனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின் கட்சியில் இணைப்பு ஏற்பட்டது.  
 
அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என பயந்தேன். ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு மாற்றம் வரும் என என்று பேசினார். இப்படி பேசும் போது இடையில் நீங்க ஏன் ஆம்பளையாக இருக்கிறீர்கள் என கேட்டதாகவும் குறிப்பிட்டார். 
இதற்கு அதிமுக தரப்பில் பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், குருமூர்த்தி ஓபிஎஸ் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டதாவது, ஓபிஎஸ்-சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில்  குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். 
 
அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். இதை ஏற்கெனவெயே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். 
 
இதற்கு பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன். எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கன்னியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து என பதிவிட்டுள்ளார்.