1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (08:43 IST)

திறக்கப்படும் டாஸ்மாக்... கடைபிடிக்கப்பட வேண்டியவை என்னென்ன?

டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டவை பின்வருமாறு... 

 
1. அனைத்து பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பணியில் இருக்க வேண்டும். 
2. கடை பணியாளர்களில் 55 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பணியில் இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
3. மதுபானம் வாங்க வருபவர்களின் கூட்டத்தை 2 பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்கு படுத்த வேண்டும்.
4. மது வாங்கவருபர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும். இல்லாவிட்டால் மதுபானம் வழங்க கூடாது.
5. டாஸ்மாக் கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும் உட்புறம், வெளிப்புறம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு முறை பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.
6. மதுபானம் வாங்க வருபவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
7. குறைந்தபட்சம் 2 பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனை கடையில் வெளிப்புறம் நின்று சமூக இடைவெளி, வாடிக்கையாளர் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிடைசர் வழங்கிய பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். மதுபானம் வாங்கிச்செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
9. மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு அதிக அளவில் மதுபானம் வழங்க கூடாது. மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.
10. விற்பனையின் போது சமூக ஆர்வலர்களை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.